உலகின் மிக நீளமான கடற் பாலம் சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குயிங்டோ - குவாங்டோ நகர் இடையே மூன்று முனைகளிருந்து இணையும் இப்பாலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சீன பொறியியலாளர்களால் கட்டப்பட்டு வந்தது.
6 வழிச்சாலை கொண்ட இப்பாலத்தின் மொத்த நீளம் 42.4 கி.மீட்டர் ஆகும். மொத்தம் 5,2000 தூண்கள் கடலிருந்து எழுப்பட்டு அதன் மேல் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
முன்னதாக அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள லேக் பான்செண்ட்ரைன் காஸ்வே பாலமே உலகின் மிக நீளமான (37.7கி.மீ) கடல் பாலமாக
சாதனை படைத்திருந்தது.
தற்போது அந்த சாதனையை உடைத்து, சீனா தங்களது கட்டுமான திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இப்பாலத்தின் மீது நாளாந்தம் 30,000 க்கும் அதிகளவான கார்கள் சென்றுவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Jiaozhou Bay பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தை கட்டிமுடிக்க 1 பில்லியன் யூரோ செலவாகியுள்ளது. இப்பாலம் லண்டனில் உள்ள Tower Bridge ஐ போன்று 174 மடங்கு நீளம் கூடியது.
இது கடந்த டிசெம்பர் 22ம் திகதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதன் தலைமை பொறியியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கணணியின் கல்குலேஷன் எல்லாம் சரியாக தான் இருக்கிறது.
ஆனால் இரு கரைகளிலிருந்தும் வளர்ச்சி அடையும் பாலம் நடுவில் சரியான மையத்தில் ஒன்று சேர்கிறதா என்ற பயம் கடைசிவரை இருந்தது என தெரிவித்தனர்.
இனி இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான பாலமாக இருக்க போகிறது எனும் தகவல் இன்னும் சில காலத்துக்கே செல்லுபடி ஆகும். இன்னமும் பத்து வருடங்களுக்குள் இந்த சாதனையை முறியடித்து புதிய கடல் பாலமொன்றை சீனாவின் குவாந்த்தோங் - ஹொங்காங், மாச்சோவ் பகுதிகளை இணைத்து கட்டுகிறது சீனா. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கடந்த டிசெம்பர் மாதம் அறிவித்திருந்தது.
2016 இற்குள் கட்டி முடிக்கப்படவிருக்கும் இப்பாலம் 30 மைல் நீளமானது. 8.0 மேக்னிடூட் நில அதிர்வையும், கடும் தைபூன் சூறாவளியையும் கூட தாங்கும் விதத்தில் இப்பாலம் அமைக்கப்படவிருக்கிறது.
உலகின் மிக நீளமான பெருந்தெருக்கள் பாலமும் சீனாவில் தான் கட்டப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது. Dayang Kunshan எனும் இப்பாலம் ரயில்வே போக்குவரத்துக்கென அமைக்கப்பட்டது. இதன் நீளம் 80 கி.மீ என்பது குறிப்பிடத்தகக்து.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.