Jim Denevan (ஜிம் டெனேவன்) எனும் நிலவியல் ஓவியர், கலிபோர்னிய கடற்கரையில் வரைந்துள்ள வரைபடங்கள் இவை.
அவருக்கு நிச்சயம் தெரியும். இவை நீண்ட நேரம் நிலைத்திருக்காது (Impermanent) என்பது.
ஏ4 கடதாசியில் ஒரு போட்ரெய்ட் ஓவியத்தை மூன்று மணிநேரம் பொறுமையாக இருந்து வரைந்து முடிக்க எம்மில் எத்தனை பேருக்கு முடியும்?
சிறிய குச்சிகள், தடிகளை கொண்டு பல மைல் நீளத்திற்கு இந்த ஓவியங்களை வரைவதற்கு அவருக்கு பல மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இரு தடவைகள் கடல் அலை, கரை தாண்டி படையெடுத்தால், ஓவியம் கடலுடன் கரைந்துவிடும். அப்படி எனில் யாருக்காக இந்த ஓவியங்களை வரைகிறார்? நிலவு ரசிக்கட்டும் என்கிறார் புன்முறுவலுடன்..!
ஓவியம் நீண்ட நேரம் கடற்கரை மண்ணில் நிலைக்காவிடினும், இவருக்கு ரோயல் சல்யூட் அடிக்கிறார்கள் இதை பார்வையிடுவதற்காகவே இங்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! ஏன்?
'Think Out Of The Box!!'
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.