ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் லிட்டருக்கு 28.8 கிமீ மைலேஜ் தரும் வேகன்-ஆர் காரை சுஸுகி வெளியுலக பார்வைக்கு காட்டியுள்ளது. அடுத்த மாதம் ஜப்பானில் விற்பனைக்கு வரும் இந்த புதிய வேகன்-ஆர் நம் நாட்டு மார்க்கெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"இஎன்இ சார்ஜ்" என்ற புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இந்த வேகன்-ஆர் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. இந்த புதிய ஹைபிரிட் தொழில்நுட்பத்திற்கு சுஸுகி காப்புரிமையையும் பெற்றுள்ளது. இதன் பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிறிய எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரேக்கிலிருந்து வெளிப்படும் ஆற்றலை லித்தியம் அயான் பேட்டரியில் சேமித்து அதன் மூலம் இதன் எலக்ட்ரிக் மோட்டார் இயங்கும். இதனால், சிறிதளவு கூடுதல் ஆற்றல் எஞ்சினுக்கு கிடைக்கும். இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் ஒரு லிட்டருக்கு 28.8 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும் என சுஸுகி தெரிவித்துள்ளது.
மேலும், இதன் ஏர்கண்டிஷனும் குறைந்த மின்சக்தியை எடுத்துக்கொண்டு இயங்கும் ஈக்கோ கூல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் ஜப்பானில் இந்த ஹைபிரிட் வேகன்-ஆர் விற்பனைக்கு வருகிறது.
இந்தநிலையில், நம் நாட்டில் பெட்ரோல் விலை விண்ணை முட்டி வருவதால் பெட்ரோல் கார் விற்பனை கடுமையாக சரிந்து வருகிறது. எனவே, அதிக மைலேஜ் தரும் இந்த புதிய ஹைபிரிட் வேகன்-ஆரை நம் நாட்டு மார்க்கெட்டில் விரைவில் மாருதி விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்க்பபடுகிறது.
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.