வாக்கிய பஞ்சாங்கம்: பி.ப. 5.45
திருக்கணிதம்: இரவு 7.20
நிறம்: வெள்ளை கலந்த பச்சை
சித்திரைப் புத்தாண்டு ‘நந்தன’ வருடம் எதிர்வரும் 13ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை சுப வேளையில் பிறக்கிறது.
கர வருடம் பங்குனி மாதம் 31 ஆம் திகதி, ஆங்கில திகதியின் படி 2012 ஏப்ரல் 13 ஆம் திகதி பிற்பகல் 5.45 க்கு நந்தன வருடம் பிறக்கிறது.
தமிழ் வருட சக்கரத்தின் 26 ஆவது வருடமான நந்தன வருடம் உத்தராட நட்சத்திரம் முதலாம் பாதம், அபரபக்கத்துக்கு அட்டமி திதியும், சித்த யோகமும் கன்னி லக்சினமும், தனு இராசியிலும் நந்தன வருடம் பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கம் கூறுகிறது.
அன்றைய தினம் பிற்பகல் 1.45 மணி முதல் இரவு 9.45 மணி வரை விஷ¤ புண்ணிய காலமாகும். பங்குனி 31 ஆம் திகதி 13.4.2012 அன்று வெள்ளிக்கிழமை முன்னிரவு 7.20 மணிக்கு நந்தன வருடம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது.
உத்தராட நட்சத்திரமும், 2 ஆம் பாதம் அபரபக்கத்து அட்டமி திதியும், சித்த யோகம் துலாம் லக்கினமும் மகர இராசியில் நந்தன வருடம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கம் கணித்துள்ளது.
மாலை 3.20 மணி முதல் இரவு 11. 20 நிமிடம் வரை புண்ணிய காலமாக கருதப்படுகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின் பிகாரமே பெளத்த சிங்கள மக்கள் புதுவருடத்தை கொண்டாடி வருகின்றனர்.
விஷ¤ புண்ணிய காலமாக கருதப்படு கின்ற நேரத்திலுள்ள மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்தல் வேண்டும்.
புத்தாடை நிறம்
நந்தன வருட பிறப்பானது பச்சை மற்றும் வெள்ளை கலந்த புத்தாடை அணிந்து கண்ணாடி, தீபம், பூரண கும்பம், இஷ்ட தெய்வங்களின் திருவுருவ படங்கள் என்பவற்றை வணங்கி தியானித்து தாய், தந்தை குரு பெரியவர்களை ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
விஷரி புண்ணியகாலம்
வாக்கிய பஞ்சாங்கப்படி- பி.ப. 1.45 முதல் இரவு- 9.45 வரை
திருக்கணித பஞ்சாங்கப்படி- மாலை 3.20 முதல் இரவு- 11.20 வரை
நந்தன வருட பிறப்பு
வாக்கிய பஞ்சாங்கம்-மாலை- 5.45 க்கு
திருக்கணித பஞ்சாங்கம்-முன்னிரவு- 7.20 க்கு
தினகரன்
0 comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.