Thursday, October 07, 2010

சமையல் குறிப்பு - பாதுஷா

ருசியான பாதுஷா என்றதும் நாக்கில் எச்சில் ஊறுகிறதா?

அது செய்வது எப்ப‍டி என்று இப்போது பார்க்க‍லாம்.

kitchen_1

தேவையான பொருட்கள்

மைதா 1/2 கிலோ

டால்டா 1/4 கிலோ


சர்க்க‍ரை 1/2 கிலோ


ரீபைண்டு எண்ணெய் 1/‌4 கிலோ


தேங்காய்ப் பூ  1/‌4 பேக்க‍ட்


பேக்கிங் பவுடர் சிறிதளவு

செய்முறை

முதலில் மைதா மாவை சலித்துக்கொள்ள‍வும், வாய் அகன்ற பேசின் போன்ற ஒரு பாத்திரத்தில் டால்டாவை போட்டு கையினால் நன்கு குழையவும். இப்பொழுது டால்டா உருகிய நெய் பதத்தில் வரும்பொழுது மைதா மாவு சிறிதளவு பேக்கிங் பவுடர், 4 ஸ்பூன் சர்க்க‍ரை சேர்த்து நன்கு மிருதுவாக பூரி மாவு பிசைவது போல பிசைய வேண்டும்.

பின்ன‍ர் பூரிமாவிற்கு செய்வதுபோல சிறுசிறு உருண்டைகளாக செய்து ஒவ்வொரு உருண்டைகளையும் உள்ள‍ங்கையில் வைத்து மற்றொரு கையினால் அதாவது மணிக்கட்டுக்கருகில் உள்ள‍ மேடான சதைப் பகுதியில் வைத்து அழுத்திடவும் தற்போது பாதுஷா உருண்டையின் நடுவில் சிறு பள்ள‍ம் போன்று காணப்படும். ஸ்டவ்வை பற்ற‍ வைத்து கடாயினை ஸ்டவ்வின்மேல் வைக்க‍வும், பாத்திரம் சூடானதும் எண்ணெயை ஊற்ற‍வும் எண்ணெய் காய்ந்த்தும் நான்கு அல்ல‍து ஐந்து பாதுஷாக்களை போட்டு பொன்னிறமாக வந்ததும் எண்ணெயினை வடித்து எடுத்து வைத்துக்கொள்ள‍வும் மற்றொரு ஸ்டவ்வில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் சர்க்க‍ரையை போட்டு             1 1/2 டம்ளர் தண்ணீர் விடவும். சர்க்க‍ரை நன்கு கரைந்து கொத்தித்து பாகு பதத்தில் ஜீரா தயாராகும். இப்பொழுது பொறித்தெடுத்த‍ பாதுஷாக்களை போட்டு சிறுதி நேரம் ஊறவிட்டு பின்ன‍ர் ஒரு தட்டில் எடுத்து ஒன்றுக்கொன்று இடைவெளி விட்டு அடுக்கி வைக்க‍வும். பாதுஷாவின் நடுவில் தேங்காய்ப் பூ கெஸ்பரை (தேங்காய் பூ ஒரே பாக்கெட்டில் பல கலர்கள் இருக்கும்)வினை சிறிது வைக்க‍வும் நன்கு ஆறியபின் எடுத்து சாப்பிடுங்கள் அந்த பார்ப்ப‍தற்க்கு அழகாகவும் ருசிப்ப‍தற்கு இருக்கும்.

சமையல் குறிப்பு போடுவதற்காண புதிய முயற்சி இந்த பாதுஷாவில் இருந்து ஆரம்பம். எனென்றால் திகட்டாமல் விரும்பி சுவைக்கும் இனிப்பு இதுவே எனது சர்வேயில்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.